தாதியர்கள் நாளை போராட்டத்தில் குதிக்கின்றனர்!

editor 2

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை காலை 8 மணியுடன் நிறைவடையவுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்காத தாதியர்கள் நாளை காலை 07 மணிமுதல் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பவற்றுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரனவுக்கும் இடையே இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற மற்றுமொரு கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன இதன்போது தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைய, பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன ஆகியோருடன் இடம்பெற்ற இரண்டாவது கலந்துரையாடலின் போது சுகாதார தொழிற்சங்கங்கள் தங்களது கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளன.

Share This Article