போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 877 பேரில் 04 பேர் விளக்கமறியல் உத்தரவின் கீழ் விசாரணை இடபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் 475 கிராம் ஹெரோயின், 501 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 126 போதைமாத்திரைகள் மற்றும் 3,605 கஞ்சா செடிகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது