கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் வரை காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தப்பிச்சென்றவர்களில் 62 பேர் மீள கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த புனர்வாழ்வு மையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டவர்களுக்கே புனர்வாழ்வு வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.