மண் சரிவினால் வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ள நிலையில் உயர் தரப்பரீட்சை நிலையங்களுக்குச் செல்லமுடியாத உயர்தர மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.