ஜோர்தானில் இலங்கையர்கள் மீது படையினர் கொடூரமாகத் தாக்குதல்!

editor 2

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு மீது அந்நாட்டு படையினர் கொடூரமான
முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படையினர் இலங்கையர்களை கொடூ ரமாக தாக்கியதுடன் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் இலங்கையர்கள் 350 பேர் சம்பளம் வழங்கப்படாமையால் மோசமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளதாக அண்மையில்
தகவல்கள் வெளியாகின.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு அதிகாரிகள் உரிய சம்பளத்தை வழங்குவதில்லை எனவும், இலங்கைக்கு மீள வருவதற்கு இடமளிப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே, ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது அந்நாட்டு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து வெளியிடுகையில்,

எமது பிரச்னையை முழு நாடும் அறிந்துள்ளது. தூதரகத்திற்கும் எல்லா விடயங்களும் தெரியும், சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. நாங்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

சாப்பாடு உள்ளிட்டவைகள் சரியாக கிடைக்காமல் தவிக்கின்றோம். இந்நிலையில், எங்களுக்கு மிக விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article