பெப்ரவரி தொடங்குகிறது நாகை – யாழ்ப்பாணம் படகுச் சேவை! கட்டணப் பட்டியலும் வெளியானது!

editor 2

காங்கேசன் துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சிவகங்கை'(சிதம்பரத்தின் திருக்குளம்) என்ற படகு தனது முதல் பயணத்தை நாகபட்டினத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி நான்கு மணி நேரத்தில் காங்கேசன்துறை சென்றடையும் என்று இந்தப் படகு சேவையை இயக்கும் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். 

‘150 பயணிகள் இந்தப் படகில் பயணிப்பார்கள். ஒரு வழிப் பயணத்துக்கு 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய் அல்லது 26 ஆயிரம் இலங்கை ரூபாய் (80 அமெரிக்க டொலர்) கட்டணமாக வசூலிக்கப்படும். 

அரசு வரிகளையும் இதர கட்டணங்களையும் குறைப்பதன் மூலம் இந்தப் பயணச்சீட்டின விலையை மேலும் குறைப்பது குறித்து இந்திய, இலங்கை அரசுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். 

ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணத்தை 57.50 அமெரிக்க டொலர் (சுமார் 18,500)அளவுக்குக் குறைக்க விழைந்துள்ளோம்.’ என்று ‘ பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான ஆதரவைப் பெற்றிருப்பதுடன் இலங்கை அரசாலும் மனமார வரவேற்கப்படுவது சிறப்பு. அதற்கான காரணம்: யாழ் – தமிழக மக்களுக்கிடையேயான வலுவான தொடர்பை இது ஏற்படுத்தும்’ என்றார் நிரஞ்சன். 

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இந்தியக் கப்பல் துறை அமைச்சகத்துக்கு இந்தச் சேவை தொடங்கும் வழிகாட்டு தல்களை மோடி வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

முதலில், காரைக்காலிலிருந்து தொடங்குவதாக இருந்த இந்தச் சேவை, அங்குள்ள துறைமுகத் தில் இரும்பு மற்றும் நிலக்கரி போக்கு வரத்துச் சுமை அதிகமிருப்பதால் அது பயணிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்பதால், இதை நாகைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

அதன்படி, கொச்சின்- இலட்சதீவுகள் இடையே இயங்கி வந்த ‘செரியபாணி’ என்ற படகுச் சேவை இந்த மார்க்கத்திற்கு மாற்றப்பட்டு ஒக் ரோபர் 14 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, பருவ மழை காரணமாக அது விரைவில் நிறுத்தப்பட்டது. இலட்சத்தீவு நிர்வாகம் ‘செரியபாணி’ கொச்சின் சேவைக்கு மீட்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்ததையடுத்து அந்தப் படகு அங்கு திருப்பி அனுப்பப்பட்டது. 

‘இந்தச் சேவைக்கு ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பிய ஆறு பேரில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்தமானில் சிறுசிறு தீவுகளுக்கிடையில் இயங்கி வந்த குறைந்த தொலைவு சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட படகை வாங்கி எங்கள் கடல் சார் பொறியியலாளரை கொண்டு அதன் இயந்திரம் மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களை ஆய்வு செய்தோம். 

அவர் பரிந்துரை செய்திருந்த சில மாற்றங்களையும் அதில் மேற்கொண்டோம். ஏனெனில், பயணி களின் வசதியும் பாதுகாப்பும் எங்கள் உயர் முன்னுரிமையாகக் கருதினோம். அந்தப் படகு ஜனவரி 15 அந்தமானிலி ருந்து வந்தடையும் என்று எதிர்பார்க் கிறோம். அதன் பிறகு இரண்டொரு நாட்களில் பயணச்சீட்டு முன்பதிவைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். 

தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று தெரிவித்தார் நிரஞ்சன். முதலில் இந்தப் படகு ‘சீ லிங்க்’ என்று அந்தமானில் இருக்கும் அதன் உரிமையாளர்களால் பெயரிடப்பட்ட தாகவும் ஆனால், தான், சிதம்பரம் கோயிலின் திருக்குளமான ‘சிவகங்கை’ என்று பெயரை மாற்ற முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். 

Share This Article