பெப்ரவரி முதல் வாரத்தில் மின் கட்டணம் குறைப்பு?

editor 2

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ‘மின் உற்பத்தியில் மேலும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் 70 வீத மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து மின் உற்பத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி, 2024ஆம் ஆண்டில், சுமார் 600 மெகா வாட்ஸ் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் பெற எதிர்பார்க்கிறோம்.

சோலர் பனல்கள் அமைக்கும் பணி யும் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 காவாட்ஸூக்கு குறைவான திட்டங்களுக்கு விரைவான வேலைத்திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம். மன்னார், பூநகரி மற்றும் அம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கான பல்வேறு பெரும் திட்டங்கள் உற்பத்தித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, நீர் மின்சாரம், சூரியசக்தி மற்றும் காற்றாலைகள் ஆகியவற்றை பயன்படுத்தி புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை மேலும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2024 ஆம் ஆண்டில் நாம் எதிர்பார்க்கும் இலக்குகளை நோக்கி நகர்வதே எமது நோக்கமாகும் என்றார்.

Share This Article