குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்சாட்டின் பேரில் 1,133 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று சனிக்கிழமை (6) தெரிவித்துள்ளது.
இதன்போது 405 கிராம் ஹெரோயின், 1.7 கிலோ கிராம் ஐஸ், 4.7 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 1946 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.