கைக்குண்டு வைத்திருந்த நிலையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ நிகினியாவ மேகவெவ பிரதேசத்தில் வயலில் மறைந்திருந்த சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட போது,
சந்தேக நபர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டு ஒன்றை எடுத்து பொலிஸ் அதிகாரிகள் மீது வீச முற்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும் பொலிஸார் தந்திரமாக கைக்குண்டைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைக்குண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.