இலங்கையில் தொலைபேசிக் கண்டணங்களும் அதிகரிப்பு!

editor 2

இலங்கையில் அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் தமது தொலைபேசி கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

பெறுமதி சேர் வரி 15% லிருந்து 18% ஆக அதிகரிப்பதால், தொலைத்தொடர்பு சேவைகள் அதற்கேற்ப 3% அதிகரிக்கும்.

தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள், இணையச் சேவைக் கட்டணங்கள், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கின்றன.

சில நிறுவனங்கள் முற்கொடுப்பனவு அட்டைக்கான கட்டணத்தை உயர்த்தவில்லை. 

அதற்குப் பதிலாக அவர்கள் பெறும் டேட்டாவின் அளவைக் குறைத்துள்ளன.

Share This Article