சி.ஐ.டி எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் வவுனியாவில் கைது!

editor 2

சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் திருட்டில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடப்குதியில் நேற்று முன்தினம் மூன்று இளைஞர்கள் வீதியால் மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரை மறித்து தாம் சி.ஐ.டி. எனக் கூறி, தம்மைத் தாண்டிக்குளம் குளக் கட்டுப்பகுதியில் இறக்கி விடுமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய அந்த இளைஞர் அவர்களை ஏற்றிக்கொண்டு தாண்டிக்குளம் குளக்கட்டுப்பகுதியால் சென்றபோது மேற்படி இளைஞரிடம் இருந்த கைத்தொலை பேசியைப் பறித்துக் கொண்டு மூன்று இளைஞர்களும் தப்பிச் சென்றனர்.

அதேவேளை, அந்த மூவரும் மடுகந்தை பகுதிக்குச் சென்று அங்கு வீதியால் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வவுனியா பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பாதிகாரி ஜெயதிலகவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சங்கிலி மற்றும் கைத்தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின்போது வவுனியாவில் திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், லப்ரொப் ஒன்றும், கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட் டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருமே கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சியில் திருடப்பட்ட பொருள்களை கிளிநொச்சி பொலிஸாரிடம் வவுனியா பொலிஸார் ஒப்படைத்தனர்.

Share This Article