போதைப்பொருள் வியாபாரம் உட்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 29 ஆம் திகதி நேற்று நள்ளிரவு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் பிடியாணை உத்தரவுக்கிணங்க 82 பேரிடம் விசாணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்ட விரோத சொத்து விவகாரம் தொடர்பில் 2 பேர் விசாரிக்கப்படவுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 590 கிராம் ஹெரோயின், ஒரு கிலோ 300 கிராம் ஐஸ், 6 கிலோ 330 கிராம் கஞ்சா உள்ளிட்ட வேறு சில போதைப்பொருள் வகைகளும் போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைதானவர்களில் போதைக்கு அடிமையான 62 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.