மகாவலி கங்கை மற்றும் மாணிக்க கங்கை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மடுல்சீமை விரலிபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதனால், குறித்த பகுதியில் வசிக்கும் 49 குடும்பங்களை சேர்ந்த 154 பேர் அந்தப்பகுதியில் உள்ள பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.