குருநாகர் மாவட்டம் பன்னல பிரதேசத்தில் நீண்டகாலமாக போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் இருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 24 கடவுச் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுளள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 22, 23 வயதுகளை உடைய இளைஞர்கள் என்றும் அவர்களிடமிருந்து 03 மடிக்கணிணிகள், பிறிண்டர்கள் 08, தொலைபேசிகள் 02, கடவுச் சீட்டுக்கள் 24, மற்றும் ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள் நீண்டகாலமாக குறித்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.