போதைப்பொருள்; 3 நாட்களில் யாழில் 70 பேர் சிக்கினர்!

editor 2

போதைப்பொருள் சார்ந்த குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற ரீதியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 70 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை – விற்பனை – கடத்தல் அதிகமாக காணப்படுவதாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடந்த மூன்று தினங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் போதைப் பொருள் பாவனையாளர்கள், போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் என 70 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் மருத்துவ அறிக்கை கிடைத்ததும் அவர்கள் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசேட நடவடிக்கை வரும் நாட்களிலும் தொடரும் என்று தெரிவித்த பொலிஸார், போதைப் பொருள் வியாபாரிகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Share This Article