கூகுள் ட்ரைவில் காணொளியை பதிவேற்றி வைத்திருந்த இளைஞர் கொழும்பில் கைது!

editor 2

கொழும்பில் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை காணொளியாகப் பதிவு செய்து கூகுள் ட்ரைவில் ஏற்றி வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் ஆபாச படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் வசிக்கும் 18 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இந்த இளைஞர் உறவு முறையான சிறுமியை வன்புணர்ந்து அதனை காணொளியாக பதிவு செய்து கூகுள் ட்ரைவில் பதிவேற்றி வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கூகுள் வழங்கிய தொடர்புடைய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இதுவாகும்.

Share This Article