இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை தீர்மானித்துள்ளது. இந்த தடை ஒருவருட காலத்துக்கு செல்லுபடியாகும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்புக்குள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் கப்பல்கள் பிரவேசிக்க முடியாது.
சேவைகள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை துறைமுகங்களுக்கு வருகை தர
முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மற்றுமொரு விசேட ஆய்வுக் கப்பலை ஈடுபடுத்தி இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார
வலயத்தை ஆராய்வதற்கு சீனா, இலங்கையிடம் அனுமதி கோரியுள்ள பின்புலத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஆய்வுகளுக்கு ஷியாங் யாங் ஹொங் (XIANG YANG HONG) 03 எனும் கப்பல் பயன்படுத்தப்படவிருந்தது. இந்த ஆய்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என சீன தூதரகம் எழுத்து மூலமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.