ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அதிகபட்ச செயற்திறனுடன் இயங்கி வருவதாக இலங்கை மின்சார சபை, தமது அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில்,
எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் போது, அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.