பஷில் அமெரிக்கா பயணித்தார்?

editor 2

பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் பஷில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனகட்சி மாநாட்டில் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலக பஷில் தீர்மானித்திருந்தார். 

இதனையடுத்து,

குறித்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்காமல் பதவியை வெற்றிடமாகவே வைப்பதற்கு கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா பயணமான பஷில் சுமார் ஒன்றரை மாதகாலம் அங்கு தங்கியிருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article