வடக்கு மாகாணத்தில் பெய்த கன மழை காரணமாக நேற்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை.
வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டமையாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 02 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 09
பாடசாலைகளும் நேற்று கற்றல் செயற்பாடுகளுக்காக இயங்கவில்லை
என்று வடக்கு மாகாணக் கல்வித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, வடக்கில் தொடர்ந்தும் அதிக மழை பொழிவதால் இன்று மேலும் பல பாடசாலைகள் இயங்க முடியாமல் பாதிப்படையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.