தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சியின் சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியில் பட்டம் வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி யான ஷீ தமிழ் சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியை நடத்தியது.
இதில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரான உதயசீலன் கில்மிஷா, மலையகத்தை சேர்ந்தவரான கனகராஜ் அசானி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், கில்மிஷா முதலி த்தைப் பிடித்தார். அவருக்கு 10 இலட்சம் இந்திய ரூபாய் பணப்பரிசு அளிக்கப்பட்டது.
பட்டம் வென்ற கில்மிஷாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றையதினம் அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.