தற்போதைய வானிலை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் அதேவேளை மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சாத்தியப்பாடுகள் உருவாகுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து குறித்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படக்கூடும் என்றும் அதன் காரணமாக 26ஆம் திகதி தொடக்கம் முதலாம் திகதி வரையில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் இதனால் முன்னெச்சரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் கிளிநொச்சி, முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.