மருந்து இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிக் குற்றச்சாட்டிற்கு அமைய சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது தடவையாக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான அவர், மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
முன்னதாக கடந்த 30ஆம் திகதி இரண்டாவது முறையாக அவர் 4 மணித்தியாலங்கள் சிஐடியில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதேவேளை, தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட 04 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.