இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து தொடர்ந்தும் அதிகரித்தே வருவதால் மேலும் அதிகளவு நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்களை மிகுந்த அவதானமாகச் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதும் பலத்த மழை பெய்து கொண்டிருப்பதனால் இரணைமடுக்குளத்திற்கான நீர் வருகை அதிகரித்தே காணப்படுகின்றது.
எனவே நீர்வரத்தின் அளவைப் பொறுத்து நீர் வெளியேற்றப்பட்டு கொண்டே இருக்கும்.
இதன் காரணமாக தற்போது வெள்ள பாதிப்புக்குள்ளாகி உள்ள இடங்களில் நீர்மட்டம் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.
எனவே இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வெள்ள அபாயம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.