தொடர் மழை; தம்பலகாமத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு!

editor 2

கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தொடர் அடை மழை காரணமாக முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா 1ம் குறுக்குத் தெரு  நீரில் மூழ்கியுள்ளதுடன் இவ் வீதி ஊடாக செல்ல முடியாதுள்ளதாக  மக்கள் தெரிவிக்கின்றனர். 

பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் இவ் வீதியையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர்.

Share This Article