அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளினதும், 2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2024 பெப்ரவரி 19 ஆரம்பமாகி ஏப்ரல் 10 வரை நடைபெறும்.
இதையடுத்து, விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கை ஏப்ரல் 24 ஆரம்பமாகி மே 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சு குறிப்பிட் டுள்ளது.
பின்னர், விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஜூன் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப் ரெம்பர் 13 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
பின்னர், 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அமைச்சு குறிப் பிட்டுள்ளது.
இதற்கமைய, 03 ஆம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் செப்ரெம்பர் 23 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரையும், 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.