திருநெல்வேலியில் ஒரு கோப்பை சுடு தண்ணீர் 100 ரூபா!

editor 2

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஒரு போத்தல் சுடு தண்ணீர் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தில் முறையிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதில் காணப்படும் குறித்த உணவத்தில் மரக்கறி உணவுப் பொதி ஒன்று 1300.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அங்கு சென்று திரும்பிய மக்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில்,

அண்மையில் குறித்த உணவகத்திற்குச் சென்ற நபர் ஒருவர் 12 கோப்பை சுடு தண்ணீருக்கு 12,000.00 பணம் செலுத்திப் பெற்றிருக்கின்ற சிட்டையை அவர் ஆதாரமாகக் குறிப்பிட்டு நுகர்வோர் உரிமையைப் பாதிக்கும் செயல் எனத் தெரிவித்து உணவக உரிமையாளர்கள் சங்கத்தில் முறைப்பாடாகவும் பதிவு செய்துள்ளார்.

Share This Article