திருடப்பட்ட சொத்துக்களை ராஜபக்ஷ குடும்பத்திடமிருந்து மீட்டாலே வரி அதிகரிப்புக்கு அவசியமிருக்காது – சந்திரிகா!

editor 2

நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ஷ குடும்பத்திடமிருந்து, திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமார துங்க.

இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் குறைந்த வரி வீதத்தை சுட்டிக்காட்டிய அவர், வரிகளை அதிகரிப்பதற்கு பதிலாக இழந்த நிதியை மீட்பதில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களி ம் கருத்துரைத்த அவர், ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

Share This Article