சீன ஆய்வுக் கப்பலை அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியா கோரிக்கை!

editor 2

இலங்கை கடற்பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வரும் சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பலான ஷியாங் யாங் ஹொங் 03 கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை தென்னிந்திய கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளின் கடற்பரப்புகளும் அதில் அடங்குகின்றன.

இலங்கையிடமும் மாலைதீவுகளிடமும் தமது கப்பலின் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு சீனாகோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடமும் மாலைதீவுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

Share This Article