தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக திருகோணமலை மாவட்டம் கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கன மழை காரணமாக குளத்தின் நீர்மட்டம் நிரம்பிவிட்டதால் கந்தளாய் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தின் ஊடாக இந்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று சனிக்கிழமை இந்த வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதன் நீரின் தாக்கம் கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா உட்பட பல வயல் நிலங்கள் மற்றும் நீரேந்து பகுதிகளை பாதிக்கக்கூடும்.
இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியான அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.