பலத்த மழை; வன்னியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

editor 2

கடந்த இரவு தொடக்கம் பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப் பாதிப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

குறிப்பாக மாந்தை கிழக்கிலிருந்து துணுக்காய் செல்லும் பாதையில் உள்ள கறுத்தப்பாலம் மற்றும் செல்வபுரம் பாலம் ஊடான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,

அதிக நீர் வரத்துக் காரணமாக, இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் முரசுமோட்டை, தர்மபுரம், விசுவமடு, றெட்பானா உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், விற்பனை நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருப்பதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article