வரவு – செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

editor 2

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை நடை பெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் கவால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 21 ஆம் திகதி வரை இரண் டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற் றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டலஸ் அணி, விமல் அணி என்பன எதிராக வாக்களித்தன.

நவம்பர் 22 ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று புதன்கிழமை பட்ஜெட் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Share This Article