தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று தோற்றேன் என்கிறார் அமெரிக்கத் தூதுவர்!

editor 2

தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று தோல்வியடைந்துள்ளேன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நான் தமிழiயும் சிங்களத்தையும் கற்க முயன்றேன்.

நான் இரண்டையும் ஒரேநேரத்தி;ல் கற்க முயன்றேன் தவறுசெய்தேன் இரண்டு மொழிகளை ஒரேநேரத்தில் கற்கமுயல்வது சவாலான விடயம். எனது கடினமான வேலைப்பளுகாரணமாக இரண்டு மொழிகளையும் கற்கமுடியவில்லை.

என்னால் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய் சில சொற்களை கற்கமுயல்கின்றேன் -எனக்கு தெரிந்த ஒரு சில சொற்களை பேசினாலும் மக்கள் உடனடியாக என்னை நோக்கி வருவதை அவதானித்துள்ளேன்.

எனக்கு மொழிகளை கற்றுக்கொள்வதில்  ஆர்வம் அதிகம் பல மொழிகளை கற்றுக்கொள்ள முயல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article