இலங்கையின் மின் வழங்கல் வழமைக்கு!

editor 2

இலங்கையின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 80% மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியிருப்பதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எஞ்சியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (09) நாடளாவிய ரீதியில் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டது.

இன்று மாலை 5.00 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This Article