நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணமான கொத்மலை முதல் பியகம வரை மின்சாரத்தை விநியோகிக்கும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதையடுத்து சில பகுதிகளில் தடைபட்ட மின்சாரம் வழமைக்கு திரும்பி உள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏனைய பகுதிகளுக்கு மின்விநியோகம் வழமைக்கு திரும்ப இரண்டு முதல் மூன்று மணித்தியாலங்கள் தேவைப்படும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
மின்தடையால் புகையிரத சேவைக்கு பாதிப்பு இல்லை என புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்வெட்டு காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படலாம் என நீர் விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்வெட்டு காரணமாக அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு விசேட வேலைத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளார்.