மட்டக்களப்பில் நினைவேந்தலில் பங்கேற்றவர்களை இலக்கு வைத்து விசாரணை!

editor 2

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றியவர்களின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று செய்தியாளர் ஒருவர் உட்பட நான்குபேரை நேற்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பொலிஸார் நினைவேந்தலில் பங்கேற்றது தொடர்பாக வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தலில் பங்கேற்பதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை வாழைச்சேனை பொலிஸார் செய்தியாளர் ஒருவர் உட்பட 4 பேருக்கு கையடக்க தொலைபேசி ஊடாக மோட்டர் சைக்கிள் பிரச்சினை தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு சென்று மோட்டர் சைக்கிள் பிரச்சினை தொடர்பாக போக்குவரத்து பொலிஸார் வருமாறு கோரிய நிலையில் இல்லை நாங்கள் அழைத்தது மாவீரர் நினைவேந்தலில் பங்கேற்றியது தொடர்பாக வாக்கு மூலங்களை பெறுவதற்காக வரவழைத்துள்ளதாகவும் தெரிவித்து வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

குறித்த நபர்கள் மாவீரார் துயிலும் இல்லத்திற்கு மோட்டர் சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு நினைவேந்தலில் பங்கேற்றிய நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களின் இலக்கங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் எழுதி எடுத்துக்கொண்டு அதனை மோட்டர் போக்குவரத்து திணைக்களத்தற்கு அனுப்பி அந்த மோட்டர் சைக்கிளின் உரிமையாளரின் பெயர் முகவரியை பெற்று அதனை கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு பொய்யான பிரச்சினைகளை தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர்.

இவ்வாறு பொலிஸார் மாவீரர் நினைவேந்தல் முடிவுற்று இருவாரங்கள் சென்ற பின்பும் தொடர்ச்சியாக நினைவேந்தலில் பங்கேற்றியவர்களை பொய் தெரிவித்து வரவழைத்து பொலிஸார் அச்சுறுத்தில் ஈடுபட்டுவருகின்ற இந்த செயற்பாட்டையடுத்து மக்கள் பீதியடைந்துள்ளனர்

Share This Article