அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். அது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்று கூற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு – மத்தேகொடை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும்.
அது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்று கூற முடியாது. ஆனால், அடுத்த ஆண்டு தேர்தல் நிச்சயம் நடக்கும். அதற்கு பொதுஜன பெரமுன திட்டமிட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. சம்பளம் உயர்த்தப்பட வேண்டுமானால் முதலில் உழைக்கும் மக்களுக்கு சம்பளம் அதிகரிப்பட வேண்டும். பின்னரே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும். யுத்தத்தின் பின்னர் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார