உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கை வந்தது!

editor 2

சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கி யஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அத்துடன், அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், சிவில் சமூகத்திரையும் சந்திக்கவுள்ளது.

இதனிடையே, தேசிய சமாதான பேரi வயை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தக் குழு சந்தித்து கலந்து ரையாடவுள்ளது. வடக்குக்கும் வரவுள்ள இந்தக்குழு அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனா திபதியாக இருந்தபோது உலக தமிழர் பேரவை உள்ளிட்ட புலம்பெயர்ந் தவர்களின் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானதையடுத்து கடந்த ஆண்டு இந்த அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது. தொடர்ந்து, புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.

தொடர்ந்து புலம் பெயர்ந்த இலங்கையருக்கான பணி மனை ஒன்றும் நிறுவப்பட்டது. இந்த பணிமனையின் பணிப்பாளர் நாயகமாக இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளின் ஒருவரான வீ. கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பணிமனை ஊடாகவே உலக தமிழர் பேரவை அரசாங்கத்தை அணுகியுள்ளது என்று கூறப்படுகின்றது

Share This Article