வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தற்போது சூறாவளியாக மாறியுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் மணித்தியாலங்களில் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த சூறாவளி நாளை மறுதினம் இந்தியாவின் தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும், நாளை 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.