களனி பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் மாணவர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் எனப் கருதப்படும் குழுவினர் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

editor 2

களனி பல்கலைக்கழக மாணவர்கள் எனப் கருதப்படும் குழுவினர் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் இவர், நேற்றுக்காலை பல்கலைக்கழக மைதானத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு சென்ற மாணவர்கள் குழு ஒன்று அவரை எழுப்பி வெளியே அழைத்துச் சென்று மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பல்கலைக்கழகத்தின் உடல் நல மையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு ஊழியர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Share This Article