தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என்று சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
என்னை இல்லாமல் ஆக்கும் நோக்கிலேயே 2010 இல் எனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
ஆனால் எனக்கு அந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டதால்தான் ஜனாதிபதி ஆக முடிந்தது என்பதை தற்போதைய சுகாதார அமைச்சருக்கு நினைவுபடுத்துகின்றேன். என்னை முடிக்க பார்த்தனர். ஆனால் நான் விழித்துக்கொண்டேன்.
எனது ஆட்சிகாலத்தில் பிடிக்கப்பட்ட போதைப் பொருட்கள் நீதவான் முன்னிலையில் எரிக்கப்பட்டது.
தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பது
தெரியவில்லை.
சுகாதார அமைச்சில் ஊழல், மோசடிகள் உள்ளன. விலை மனுகோரல்கூட முறையாக நடப்பதில்லை. ஊழல், மோசடி நிறுத்தப்பட வேண்டும்-என்றார்.