மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என்று திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ. கே. செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரச நிதி செயல்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல், டீசல் என்பனவற்றுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்படவுள்ளது.
எனினும், மண்ணெண்ணெய் மற்றும் மசகு எண்ணெய்க்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது.
மின்சார கட்டணத்துக்கும் பெறுமதி சேர் வரி சேர்க்கப்படுவதனால் அதன் கட்டணமும் அதிகரிக்கும் – என்றார