இலங்கைக்கு கிழக்காக வங்ககடலில் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துவருகிறது.
தற்போது திருகோணமலைக்கு கிழக்காக 477 கி.மீ தொலைவில் அதன் மையப்பகுதி அமைந்து காணப்படுகிறது.
அதன் வெளி வளையம் இலங்கையை சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் கிழக்கு கரையோர மாவட்டங்களிலும் அதனை அண்டிய உள் தமிழக மாவட்டங்களிலும் பரவலாக மழை கிடைக்க வாய்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இலங்கையில் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் பரவலாக மழை கிடைக்க வாய்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் கனமழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அவ்வப்போது இடியுடன் மழை பொழியக்கூடும்.
எதிர்வரும் 05 ஆம் திகதிவரை மழைநிலைமை காணப்படும்.
பெரும்பாலும் குளங்கள் நிறைந்து வான் பாயும் நிலையில், தற்போது கிடைக்கும் மழை பரவலாக வெள்ள நிலைமையை ஏற்படுத்தலாம்.
தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது முக்கியமானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,
தேவையான செயல்கள்:
கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கூறிய கடல் பகுதிகளில் இருப்பவர்கள் கடற்கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் மீனவ மற்றும் கடற்படை சமூகம் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது