சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கையிலும்!

editor 2

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பேராசிரியர் சந்தன ஜீவாந்த தெரிவித்தார். 

இது சீனாவில் இருந்து பதிவாகும் சளியின் கலவையாகும். சீனாவில் பரவிவரும் நிமோனியா நிலைமை நாட்டிலும் பரவுமானால், அதனைக் கண்டறியும் ஆய்வகங்கள் நாட்டில் உள்ளன. வைரஸ் தொடர்பில் இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை.’ எனவும் சந்தன ஜீவந்த கூறினார். 

சீனாவில் பீஜிங், லியோனிங் உள்ளிட்ட மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இதனையடுத்து, வட சீனாவில் பரவிவரும் நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு அறிவித்திருந்தது. 

அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்குப் பின்னால் புதிய வைரஸ் இல்லை என சீன சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக விளக்கமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article