தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்தின்
உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்
தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவந்தார்.
இது குறித்து தனியார் வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்
விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை இராமாபுரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.