“துவராகாவின் அறிக்கை” – சுவிஸில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கப் போகும் பெண்? (திருத்தம்)

editor 2

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகள் துவாராகாவின் பெயரில் வெளிவந்த காணொளியில் உள்ள பெண் சுவிஸில் புலம்பெயர்ந்து வசிப்பர் என்றும் ஆள் மாறாட்டம் செய்தமை தொடர்பில் அவர் மீது பொது நல வழக்கு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்,

சுவிஸில் அவர் புகலிடக் கோரிக்கைக்காக சமர்ப்பித்திருக்கும் பதிவுகளுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ள காணொளியை ஒப்பிட்டு அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் ஆள் மாறாட்டம் மேற்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையாக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் போருக்கு பின்னரேயே மலேசியா ஊடாக சுவிஸூக்கு புலம்பெயர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

02 இற்கும் மேற்பட்ட திருமணம் புரிந்தவர் என்றும், இரண்டு பிள்ளைகளின் தாயார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது கணவர், பிரான்ஸில் வசிப்பவர் என்றும் அவருடைய பிள்ளை குறித்த பெண்ணுடன் வாழ்ந்துவருவதாகவும் பிள்ளையை கணவன் சந்திப்பதற்கு பெண் அனுமதி வழங்கவில்லை என்றும் குறித்த கணவர் ஊடகவியலாளர்கள் சிலரிடம் தெரிவித்திருக்கின்றார்.

இதனிடையே,

இந்தியாவில் உள்ள கவிஞர் காசியானந்தனை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்புகொண்டு இவ்வாறான மோசடியான சம்பவம் இடம்பெறுவதற்கு எவ்வாறு துணைபோகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த அவர்,

“ஒரு பொம்பிளைப் பிள்ளை தானாக முன்வந்து இப்பிடி ஒரு விசயம் செய்யேக்க ஏன் குழப்பிறீங்கள்?” என்று கேள்வி எழுப்பியதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

குறிப்பு – ஏற்கனவே செய்தியில் பகிரப்பட்ட படத்தில் இடம்பெற்ற குடும்பத்திற்கும் குறித்த பெண்ணிற்கும் சம்பந்தம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் படத்தினை நீக்கியுள்ளோம். அதனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்காக மனம் வருந்துகிறோம்.

ஆ-ர்.

Share This Article