பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்!

Editor 1

பல மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணிநேரத்திற்கான அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகல் வெளியிட்டது.

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, மத்திய வடக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மழையுடன் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, கேகாலை, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாயம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article