பகல் நேரத்தில் மூடப்பட்டுக் காணப்படும் வீடுகளுக்குள் புகுந்து திருடிய ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகளுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துருகிரிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு இந்த நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை ஹபரகட போதிராஜா பகுதியில் வைத்து கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோதே இந்த வீடுகள் உடைப்பு தொடர்பான தகவல்கள் தெரிய வந்துள் ளதாக பொலிஸார் கூறினர்.
அத்துருகிரிய, மீகொட, மாலபே, ஹோமாகம, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுகளில் 11 வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களில் சித்தியடைந்து உயர்தரத்துக்குத் தகைமை பெற்றிருந்த போதிலும், வீட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்னை காரணமாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றாமல் இராணுவ சேவையில் இணைந்துகொண்டவர்.
பின்னர் அதிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.