நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது – மஹிந்த அறிவுரை!

editor 2

எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது
என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நேற்று முன் தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த
போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று பாராளுமன்றில் கதைக்கும் பலர், அவர்களது ஆட்சிக் காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியம், நாட்டுக்கு பரிந்துரைகளை விதித்துள்ளது. இவற்றை அர
சாங்கம் நடைமுறைப்படுத்திவருகிறது.

மக்களுக்குத் தேவையான நாட்டை நாம் உருவாக்க வேண்டுமே ஒழிய, எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது.

எதிர்ப்பினை வெளியிடும்தரப்பினர், அன்று சவாலை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்பதை நாமும் அறிந்துக் கொண்டுள்ளோம்.

இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாட்டையே இந்த வரவு-செலவுத்திட்டம் முன்வைத்துள்ளது-என்றார்.

Share This Article