தொடரும் சீரற்ற காலநிலையை அடுத்து இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,
பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை இன்று இரவு 8 மணிவரை நீடிக்கும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
இதனிடையேபேராதனை நகரில் உள்ள பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அத்துடன் நான்கு வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தக நிலையமொன்றில் தங்கியிருந்த 68 வயதான ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தார்.
இதேவேளை, பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பலாங்கொடை – பம்பஹின்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.